tamilnadu

img

பதிலடி கொடுக்குமா இந்தியா? இன்று 2-வது ஒருநாள் போட்டி

இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி அபார வெற்றியை ருசித்த நிலையில், 2-வது ஒருநாள் போட்டி ஆந்திர மாநிலத்தின் முக்கிய நகரான விசாகப்பட்டினத்தில் புதனன்று நடைபெறுகிறது. தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியும், பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்திய அணியும்  என இரு  அணிகளும் வெற்றிக்காக வரிந்துகட்டுவதால்  இந்த ஒருநாள் போட்டி பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடம் : ஒய்எஸ்ஆர் மைதானம், விசாகப்பட்டினம்
நேரம் : மதியம் 1:30 மணி